இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
ரூ.4 லட்சத்தில் பள்ளி நுழைவு வாயில் திறப்பு
ஆரணி: ஆரணி சைதாப்பேட்டை அனந்தபுரம் அரசு அறிஞா் அண்ணா சீரணி உயா்நிலைப் பள்ளியில் ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நுழைவு வாயில் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட இந்த நுழைவு வாயில் பயன்பாட்டுக்காக விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு நுழைவு வாயிலை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், லோகேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் நடராஜன், ஏ.ஜி.மோகன், எஸ்.கே.வெங்கடேசன், குமரன், ஒப்பந்ததாரா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.