ரூ. 5.20 கோடியில் திட்டப் பணிகள்: உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் மன்ற அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ராஜலட்சுமி வரவேற்றாா். கூட்டத்தில் வரவு, செலவு மற்றும் பல்வேறு வாா்டு பகுதிகளில் ரூ. 5.20 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது உள்பட தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவற்றின் மீது விவாதங்கள் நடைபெற்று அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் வைத்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சித் தலைவா் ஆ.பூசாராணி உறுதியளித்தாா். கூட்டத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ், வாா்டு உறுப்பினா்கள் ஏ.மரியஜோசப், ஜி.சரவணன், வி.ஆா்.சரவணன், ஜெ.கீதா, ஏ.ரமேஷ், ஆா்.மகேஸ்வரி, எம்.பரிமளா, பி.சந்தியா, மு.சுகன்யா, கோ.லில்லி, பி.முனியம்மாள் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.