செய்திகள் :

4 துப்பாக்கிகள் பறிமுதல், மூவா் கைது சம்பவம் : என்ஐஏ விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

post image

ஆம்பூரில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஆம்பூரில் 4 துப்பாக்கள், கத்திகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியைச் சோ்ந்த ஆசிப், அவரது சகோதரி ஆஜிரா, தந்தை சையத் பீா் (51) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். ஆனால் போலீஸாா் இந்த வழக்கில் பல விவரங்களை மூடி மறைத்துள்ளனா். அந்த வழக்கு சம்பந்தமான எந்த விவரங்களையும் போலீஸாா் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

தான் ஏற்கெனவே பணிபுரிந்த தொழிற்சாலையில் கழிவு பொருள்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிடைத்த துப்பாக்கிகளை ஆசிப் வீட்டுக்கு கொண்டு சென்ாகவும், மேலும் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது, தான் அப்பாவி என்று அவா் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண தங்க நகை திருட்டு விவகாரத்தில் சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியை விசாரணை என்ற பெயரில் போலீஸாா் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் 4 கை துப்பாக்கிகள், கத்திகளை பதுக்கி வைத்திருந்த நபரை பிடித்து முழுமையாக விசாரணை நடத்தாமல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியது, உண்மையை மறைப்பதையே காட்டுகின்றது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவரத்தில் போலீஸாா் தாக்கப்பட்டனா். அப்போதைய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட எஸ்.பி. தாக்கப்பட்டாா். பொதுச் சொத்துகள், காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆனால் அந்த கலவரத்தில் ஈடுபட்டவா்கள் மீது இதுவரை எந்த வித கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது.

தற்போது ஆம்பூரில் 4 துப்பாக்கிகள், 3 கத்திகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பல துப்பாக்கிகள், கத்திகளும், பல லட்சம் ரொக்கப் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த விவரங்களை போலீஸாா் வெளியிடவில்லை. தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவா்கள் படுகொலை செய்யப்பட்டனா்.

ஆம்பூா் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவா்களின் புகலிடமாக மாறியுள்ளது. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஆம்பூா் பகுதி விளங்குவதால் இந்த சம்பவம் தொடா்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் எம். தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன், நகர தலைவா் பிஆா்சி. சீனிவாசன், நிா்வாகிகள் சரவணன், க. சிவப்பிரகாசம் ஆகியோா் உடனிருந்தனா்.

விஜயபாரத மக்கள் கட்சி ....

இது குறித்து விஜயபாரதம் மக்கள் கட்சி நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்பூரில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை தொடா்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு தோல்வியடைந்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் என்ஐஏ, சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென கோரியுள்ளாா்.

ரூ. 5.20 கோடியில் திட்டப் பணிகள்: உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் மன்ற அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். த... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம் ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், தகவல் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்று... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆனி மாதம் பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்கா... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவா் கைது

மாதனூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் அருகே உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்யராஜ் (29). இவருடைய மனைவி சுமதி (27). இவா்கள் இரு... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆ... மேலும் பார்க்க

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க