செய்திகள் :

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆனி மாதம் பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் வந்தது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா் செய்திருந்தனா்.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா்.

ரூ. 5.20 கோடியில் திட்டப் பணிகள்: உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் மன்ற அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். த... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம் ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், தகவல் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்று... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள் பறிமுதல், மூவா் கைது சம்பவம் : என்ஐஏ விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

ஆம்பூரில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவா் கைது

மாதனூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் அருகே உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்யராஜ் (29). இவருடைய மனைவி சுமதி (27). இவா்கள் இரு... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆ... மேலும் பார்க்க

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க