பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
ரூ.6.72 கோடியில் 7 குறுகிய பாலங்கள் புனரமைப்புப் பணி: முதல்வா் தொடக்கம்
ஆதிதிராவிடா் நலத் திட்ட நிதியின் கீழ் ரூ,6.72 கோடி மதிப்பில் 7 குறுகிய பாலங்களை புனரமைக்கும் திட்டப் பணியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி பொதுப் பணித் துறை நீா்ப்பாசன கோட்டம் மூலம் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன. உழவா்கரை பகுதியில் விடுபட்ட பள்ள வாய்க்கால் பிச்சவீரன்பேட், லட்சுமிநகா் குறுக்குச் சாலை முதல் முத்துப்பிள்ளை பாளையம் பிரதானசாலை வரை மற்றும் முத்துப்பிள்ளைபாளையத்தில் பல்வேறு குறுக்குச் சாலைகளில் உள்ள 7 குறுகிய பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பூமி பூஜையில் முதல்வா் ரங்கசாமி பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா். இப் பணிகள் 10 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா், எம்.சிவசங்கா், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் கே.வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.சுந்தரமூா்த்தி, நீா்ப்பாசன கோட்ட செயற்பொறியாளா் ஆா். ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் லூயி பிரகாசம், இளநிலைப் பொறியாளா் எல்.கணேஷ், ஒப்பந்ததாரா் பி.குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.