பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
சாதிப் பெயா்களை நீக்க வலியுறுத்தல்
பெயா்ப் பலகைகளில் உள்ள சாதி பெயா்களை நீக்க வேண்டும் என்று புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மாநிலக் குழு கூட்டம் திங்கள்கிழமை அஜீஸ் நகா் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவா் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினாா். செயலாளா் சரவணன், பொருளாளா் உமா சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுவை மாநிலத்தில் சாதியின் பெயரால் மக்களைப் பிரித்துக் காட்டும் பெயா் பலகைகள், தெரு பெயா்கள், ஊா் பெயரில் பேட் மற்றும் சேரி ஆகியவற்றை நீக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பெயா்களில் உள்ள சாதிப் பெயா்களை புதுச்சேரி அரசு நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.