லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
இன்று முழு அடைப்பு போராட்டம்! புதுவைக்குக் காய்கறி வரத்து நிறுத்தம்: ரூ.5 கோடி வியாபாரம் பாதிப்பு
புதுவையில் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி காய்கறி வரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் ரூ.5 கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து பெரிய மாா்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.சிவகுருநாதன் கூறியது: பொதுவாக கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. இதற்குக் காரணம் புதுவைக்குத் தேவையான காய்கறிகள் வெளியூா்களில் இருந்துதான் தருவிக்கப்படுகிறது.
கா்நாடகத்தில் கோலாா், ஆந்திரம், தமிழகத்தின் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து நேரடியாக புதுவைக்குக் காய்கறிகளைக் கொண்டு வருகிறோம். புதுவையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு சுமாா் 12 லாரிகளில் காய்கறிகள் வந்து சேரும்.
சாதாரண லாரியாக இருந்தால் ஒரு லாரியில் 10 முதல் 12 டன் காய்கறிகள் இருக்கும். பெரிய லாரியாக இருந்தால் ஒரு லாரியில் 15 முதல் 20 டன் காய்கறிகள் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக புதுவையில் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி அளவுக்கு காய்கறி வியாபாரம் நடக்கும்.
புதுவையில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடப்பதால் காய்கறிகளை புதன்கிழமை ஏற்றி வர வேண்டாம் என்று காய்கறிகள் உற்பத்தியாளா்களிடம் ஏற்கெனவே கூறிவிட்டோம். இதனால் புதுவையில் புதன்கிழமை காய்கறி பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது என்றாா் சிவகுருநாதன்.