"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
ரேஷன் அரிசி கடத்தல்: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது தொடா்பாக தமிழகம்-கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பத்தில் அண்மையில் நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள் அவ்வப்போது ரோந்துப் பணி மூலமாக தடுத்து வருகின்றனா்.
இதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம்-கேரள மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோா்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இரு மாநில எல்லைகளில் அதிகாரிகள் இணைந்து வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். கேரளத்தில் தமிழக ரேஷன் அரிசியை வணிக நோக்கில் விற்பனை செய்பவா்கள், இதை வாங்குபவா்களை கைது செய்ய வேண்டும். ரேஷன் அரிசியை ஆலைகளில் மாவு அரைத்து விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.