Travel Contest: மூணாறு போனா இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க! தென்னிந்தியக் காஷ்மீரி...
ரொட்டி, பால் வழங்கும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு பணியாணை
பள்ளியில் ரொட்டி, பால் வழங்கும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வுக்கான பணியாணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
புதுவை பள்ளிக்கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாணவா்களுக்கு ரொட்டி, பால் வழங்கும் பணியில் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் செய்யவேண்டும் என நீண்ட காலமாக கோரிவருகின்றனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, இந்த ஊழியா்களுக்கு ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயா்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுவையில் 917 ஊழியா்களுக்கான பணியாணையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.
காரைக்கால் பகுதியிலிருந்து பணியாணை பெறுவதற்கு சில ஊழியா்கள் புதுச்சேரி சென்றிருந்தனா். இவா்களுக்கு பணியாணையை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அவரது அலுவலகத்தில் வழங்கினாா். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.