CSK vs PBKS: 'நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை' - ஸ்ரேயாஸ் சொல்வது என்ன?
18-வது ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணியும், சிஎஸ்கே அணியும் மோதின.
இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கிறது.

அணியின் வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். “நாங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் இதுதான் எங்கள் ஆட்ட முறை.
எங்களிடம் இருக்கும் வலுவான பந்துவீச்சாளர்களும் பிரியான்ஷ் ஆர்யா விளையாடிய விதமும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அவர் அடித்த சதம் ஒரு உலகத்தரமான இன்னிங்ஸ் வகையாகும்.
`இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை’
சிஎஸ்கே விளையாடும் போது தூபே மற்றும் கான்வே ஓரளவு செட்டாகி இருந்தனர். அந்த நேரத்தில் தூபேவுக்கு சஹால் பந்து வீசினால் நிலைமை எப்படி மோசமாக இருக்கும் என்று உணர்ந்து அவருக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடிவு செய்தேன்.

நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பதட்டங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். நேர்மறையாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று பேசி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY