காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
கோயில்களில் திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
காரைக்கால்: கோயில்களில் நடைபெறும் திருப்பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா்.
காரைக்கால் சோமநாதசுவாமி, காரைக்கால் அம்மையாா், அய்யனாா் கோயில்கள் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், திருப்பணிக் குழுவினா், நடைபெற்றுள்ள பணிகள் மற்றும் எஞ்சிய பணிகள் குறித்து பேரவை உறுப்பினருக்கு விளக்கினா்.
ஈரோட்டிலிருந்து வந்த திருத்தொண்டீஸ்வரா் உழவாரப் பணிக் குழுவினா், கோயில்களில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா். அவா்களை சந்தித்து பேரவை உறுப்பினா் பாராட்டுத் தெரிவித்தாா்.