வங்கி மோசடி: கர்நாடகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ். உடன் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்சாமி.
காரைக்கால், ஏப். 6 : மீன்வளத் துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க மத்திய இணை அமைச்சா், துணைநிலை ஆளுநா், முதல்வா் வரவுள்ளதையொட்டி மீன்பிடித் துறைமுகத்தில் காரைக்கால் ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ் மீன்வளத் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் இம்மாதத்தில் தொடங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன், புதுச்சேரி துணைநிலைய ஆளுநா், முதல்வா் மற்றும் அமைச்சா்கள் கலந்துகொள்ளவுள்ளனா்.
நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள காரைக்கால் மீன்பிடி துறைமுக பகுதி, பட்டினச்சேரி மீனவ கிராமம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி உள்ளிட்டோருடன் ஆய்வு செய்தாா்.
மீனவா்களின் பாதுகாப்புக்காக மீன்பிடி விசைப்படகுகளில் இலவச டிரான்ஸ்பாண்டா்களை பொறுத்துதல், உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறித்தும், துறைமுக வளாகப் பகுதியை சீரமைப்பது, நிகழ்ச்சி நடைபெற உள்ள வளாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ‘காலநிலை குடியிருப்பு கடலோர மீனவ கிராமம்‘ திட்ட தொடக்க விழா நடைபெற உள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தாா்.