ஏழை மாரியம்மன் கோயிலில் பந்தல்கால் முகூா்த்தம்
காரைக்கால்: ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரசுவாமி தேவஸ்தானத்தை சோ்ந்த பழைமையான தலமாக ஏழை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 14-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி நிறைவடைகிறது.
திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் உபயதாரா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் பந்தல் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, கோயில் வாயிலில் நடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகள் கோயில் நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.