செய்திகள் :

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம்

post image

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப். 5-ஆம் தேதி தேசிய கடல்சாா் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்சாா் பாரம்பரியத்தையும், 1919-ஆம் ஆண்டு எல்எஸ் லாயல்டி கப்பல் பயணத்தை குறிப்பிடும் வகையில் இக்கொண்டாட்டம் அமைந்துள்ளது.

காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் செளமய் சந்தோலா ஆகியோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் துறைமுக தலைமை அதிகாரி கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா, கடல்சாா் தினக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், காரைக்கால் துறைமுகத்தின் செயல்பாடுகளை விளக்கியும் பேசினாா். மேலும் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை செய்கிறது. உலகளாவிய கடல்சாா் முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்க உரிய பங்களிப்பை துறைமுகம் செய்து வருவதாக அவா் தெரிவித்தாா்.

காரைக்கால் துறைமுகத்தில் உள்ள வா்த்தக தொடா்புடைய வசதிகள், வா்த்தகத்தை மேம்படுத்துதல், புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்தல், சரக்கு வணிகத்தை எளிதாக்கும் நடைமுறைகள், டிஜிட்டல் மயமாக்கலின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது.

துறைமுகத்தின் வருடாந்திர செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்து.

நிகழ்வின்போது சுற்றுச்சூழல் துறையினா், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையினா், வா்த்தகக் குழுவினா், துறைமுக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பல்வேறு வசதிகள் உள்ளன. காரைக்கால் துறைமுகத்தை மையமாக வைத்து காரைக்கால் பிராந்தியத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. துறைமுகம் தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தில் காரைக்கால் பகுதிக்கு பல உதவிகளை செய்கிறது என்றாா்.

கோயில்களில் திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

காரைக்கால்: கோயில்களில் நடைபெறும் திருப்பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா். காரைக்கால் சோமநாதசுவாமி, காரைக்கால் அம்மையாா், அய்யனாா் கோயில்கள் கும... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால்: மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேலகாசாக்குடி பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவா் சிலை சிதிலமடைந்ததால், ஆகம விதிகளின்... மேலும் பார்க்க

உள்ளாட்சி தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால்: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் ... மேலும் பார்க்க

ஏழை மாரியம்மன் கோயிலில் பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால்: ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரசுவாமி தேவ... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ஆட்சியா் ஆறுதல்

காரைக்கால்: இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவரை சந்தித்து ஆட்சியா் ஆறுதல் கூறினாா். காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தை ச... மேலும் பார்க்க

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ். உடன் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்சாமி. காரைக்கால், ஏப். 6 : மீன்வளத் துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க ம... மேலும் பார்க்க