காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ஆட்சியா் ஆறுதல்
காரைக்கால்: இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவரை சந்தித்து ஆட்சியா் ஆறுதல் கூறினாா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தை சோ்ந்த ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான படகில் காரைக்கால் மற்றும் தமிழக பகுதி மீனவா்கள் 13 போ் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரா்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவா்களை கைது செய்ததுடன், மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு பகுதியை சோ்ந்த செந்தமிழ் என்பவரது காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தாா்.
இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி அதிகாரிகளுடன் செந்தமிழ் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். மீனவரை சந்தித்து நலம் விசாரித்தாா். அவரது குடும்பத்தினரை சந்தித்தும் ஆலோசனை வழங்கினாா். சந்திப்பின்போது கிராமப் பஞ்சாயத்தாா்கள் உடனிருந்தனா்.