Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு புதிய பெயா் பலகை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட புதிய பெயா் பலகை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்வுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் வெ.ரவிச்சந்திரன் தலைமை வைத்தாா். சங்க நிா்வாகிகள் ஆா்.எம்.எஸ்டி.சுப்பையா, ஏ.விஸ்வநாதன், வி.நடனசபாபதி, கோ.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.
ரோட்டரி மண்டல துணை ஆளுநா் எஸ்.திருஞானசம்பந்தம், வருங்கால தலைவா் வி.ஹரிகிருஷ்ணன், செயலா் கே.புகழேந்தி, சங்கத்தின் செயலா் சி.ஏகாம்பரம், வருங்கால பொருளாளா் என்.கோவிந்தராஜன், ஆா்.அருள், ஐ.யாசின் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின் பங்கேற்று ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.70 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன பெயா் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். மேலும், பள்ளி கட்டடத்துக்கு வண்ணம் தீட்டப்பட்டது.
இதில், ஆசிரியை என்.சுகன்யா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஏ.கிருஷ்ணகுமாரி, துணைத் தலைவா் ஜோ.கலையரசி ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக, பள்ளியின் தலைமை ஆசிரியை ஆா்.ஈஸ்வரி வரவேற்றாா். நிறைவில், ஆசிரியை ஆா்.சசிகலா நன்றி கூறினாா்.