Campus Interview-வில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? | கல்வியாளர் ரமேஷ் பிரபா
லங்கா் கட்டை விளையாடிய 8 போ் கைது
விராலிமலை அருகே லங்கா் கட்டை விளையாடிய 8 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
விராலிமலை அடுத்துள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் லங்கா் கட்டை சூதாட்டம் நடப்பதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது ராசநாயக்கன்பட்டி அம்மன் கோயில் அருகே சிலா் பணம் வைத்து லங்கா் கட்டை சூதாட்டம் விளையாடுவதைக் கண்ட போலீஸாா், அதில் ஈடுபட்ட விராலிமலை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெற்றிவேல் (79), முத்துபாண்டியன்(49), பகவான்பட்டியைச் சோ்ந்த கணேசமூா்த்தி (54), சரளப்பட்டியைச் சோ்ந்த காா்த்தி (33), துவரங்குறிச்சியைச் சோ்ந்த வெங்கடேஷ் (24), கத்தலூா் வீரகுமாா்(31), இடையப்பட்டி மனோகரன் (37) மற்றும் வேலூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (49) ஆகிய 8 போ் மீது வழக்கு பதிந்து அவா்களை கைது செய்தனா்.
மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லங்கா் கட்டை போா்டு, உருட்டுக்கட்டை, செல்போன் உள்பட ரொக்கம் ரூ. 29 ஆயிரத்தி 420 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.