செய்திகள் :

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி புதிய வெளியீட்டுத் தேதி!

post image

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு டூட் (dude) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

அதேநேரம், நயன்தாரா தயாரிப்பில் உருவான லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் வெளியாவது குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்ட நிலையில், லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை!

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை இன்று(மே 12)நடைபெற்றது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த... மேலும் பார்க்க

சுவாமிமலையில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அறுபடை வீ... மேலும் பார்க்க

திருமண நிகழ்வில் பற்கேற்ற பிரபல காமெடி நடிகர் திடீர் பலி

உடுப்பியில் திருமண விழாவில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகர் திடீரென சரிந்து விழுந்து பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகில் பிரபல காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி(33). இவர் உடுப்பியில... மேலும் பார்க்க

துடரும் ரூ. 200 கோடி வசூல்!

நடிகர் மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை அடைந்துள்ளது. இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தே... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் நட்சத்திர வீரர் விராட் கோலி. 14 ஆண்டுகால டெஸ்ட் பயணம் முடிவுக்கு வருவதாக விராட் கோலி உருக்கமுடன் பதிவிட்டிருக்கிறார்.டெஸ்ட் போட்டிகள் ... மேலும் பார்க்க