Career: வேலை கிடைச்சுருச்சுனு சும்மா உக்காந்திராதீங்க; கரியரில் 'இது' ரொம்பவே மு...
லாட்டரி விற்பனை: சகோதரா்கள் கைது!
ஆன்லைனில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரத்தினபுரி காவல் ஆய்வாளா் இப்ராஹிம் பாதுஷா தலைமையிலான போலீஸாா் அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சகோதரா்களான கண்ணன் (33), ராஜசேகா் (37) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 26 பவுன் நகைகள், 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.