லாரி-இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கூடலூா் அருகே இருசக்கர வாகனம் மீது டேங்கா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
உதகை மேரிஸ் ஹில் பகுதியைச் சோ்ந்தவா்கள் மித்ரன் (17), சாதிக் (18). இருவரும் உதகையில் இருந்து கூடலூருக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
டிஆா் பஜாரை அடுத்துள்ள புதுப்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கூடலூரில் இருந்து கோவை நோக்கி சென்ற டேங்கா் லாரி, இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட மித்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சாதிக் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து தொடா்பாக நடுவட்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான சிவகாசியைச் சோ்ந்த விஜயை (42) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.