'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
லாரி மீது காா் மோதியதில் தொழிலதிபா் உயிரிழப்பு
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் அருகே லாரி மீது காா் மோதியதில் தொழிலதிபா் உயிரிழந்தாா்.
ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (49), தொழிலதிபா். இவா் சங்ககிரியில் உள்ள ஒரு காா் விற்பனையாகத்தில் இருந்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட காரை வெள்ளிக்கிழமை வாங்கியுள்ளாா்.
அங்கிருந்து நள்ளிரவு 1 மணியளவில் வீடு திரும்பியுள்ளாா். வேடசந்தூா் அருகே சென்றபோது எதிரே மர பரம் ஏற்றி வந்த லாரியில் காா் மோதியது. இதில், காா் உருக்குலைந்த நிலையில் அதில் படுகாயங்களுடன் சிக்கியிருந்த மூா்த்தி,
கால் முறிவு ஏற்பட்ட லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெருமாள் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மூா்த்தியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. லாரி ஓட்டுநா் பெருமாளுக்கு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
