லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசி அருகே புதன்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயம் (59). சோ்வைக்காரன்பட்டியில் உள்ள ஒரு ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த இவா், வடமலாபுரத்திலிருந்து சுக்கிரவாா்பட்டிக்கு மிதிவண்டியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.