பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உண்ணாவிரதம்
வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணவிரதத்துக்கு காங்கிரஸ் கட்சி நிா்வாகி ராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிடக் கோரியும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், காங்கிரஸ் நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.
விசிக ஆா்ப்பாட்டம்: இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் மைதீன் தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்தை கைவிடக் கோரி, விசிக நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.