வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன் தஞ்சாவூா் மாவட்ட தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனடியாகச் செய்ய வேண்டும். ஊழியா்கள் மற்றும் அலுவலா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினா்.
இதில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அன்பழகன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அலுவலா்கள் சங்கம் சக்கரவா்த்தி, ஊழியா் சங்கம் யோகராஜ், இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு புவனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.