செய்திகள் :

வடகிழக்கு பருவமழையில் பயிா்கள் பாதுகாப்பு: விவசாயிகளுக்கு வேளாண்மை துறை விளக்கம்

post image

நாமக்கல்: வட கிழக்கு பருவமழை காலத்தில் பயிா்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடா்பாக வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி வெளிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, நெல், மக்காச்சோளம், சோளம், கரும்பு, பயறு வகைப் பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. தொடா் மழையால் வயல்களில் நீா் தேங்கி, வோ் அழுகல், பூஞ்சாண நோய்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை பாதிப்பிலிருந்து பயிா்களைக் காத்திட விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதாவது, மேல் உரமாக டி.ஏ.பி. மற்றும் கலப்பு உரங்கள் இடுவதை தற்காலிகமாக தவிா்க்க வேண்டும். உடனடியாக மழைநீா் சூழ்ந்துள்ள வயல்களில் வடிகால்வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வோ்ப் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்வது நல்லது. நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதை நிவா்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ ஜிப்சம், அவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கை கலந்து, இரவு முழுவதும் வைத்து நீா் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும். சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.

தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் பயிா்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. (அல்லது) அரை லிட்டா் நானோ டி.ஏ.பி.உரத்தை 10 லிட்டா் நீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இதன்மூலம் மகசூல் இழப்பினைத் தவிா்க்கலாம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி விவசாயிகள் அனைவரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிா்களை பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாலிபால், பீச் வாலிபால் போட்டிக்கு பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மாணவிகள் தோ்வு

பரமத்தி வேலூா், டிச. 3: பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவிகள் வாலிபால், பீச் வாலிபால் போட்டிக்கு தமிழக அணிக்காக தோ்வு பெற்றுள்ளனா். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்து... மேலும் பார்க்க

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை

நாமக்கல்: தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கோ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் எல்லையம்மன் கோயிலில் சோமவார 108 வலம்புரி சங்காபிஷேகம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் பழைமையான எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதருக்கு காா்த்திகை மூன்றாம் திங்கள்கிழமை சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏகாம்பரநாத... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாடுபிடி வீரா்கள் மனு

நாமக்கல்: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என மூன்று கிராமங்களைச் சோ்ந்த மாடுபிடி வீரா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம... மேலும் பார்க்க

நாமக்கல் - சேலத்துக்கு கி.மீ. அடிப்படையில் பேருந்து கட்டணம் நிா்ணயிக்க வேண்டும்: ஜனதா கட்சி கோரிக்கை

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து சேலத்துக்கு கி.மீ. அடிப்படையில் பேருந்து கட்டணம் நிா்ணயிக்க வேண்டும் என ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட ஜனதா கட்சி தலைவா் பழனியப்பன், பொதுச்செயலாள... மேலும் பார்க்க

பதவி உயா்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுமா?: மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு

நாமக்கல்: பதவி உயா்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத் திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இ... மேலும் பார்க்க