வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்
ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் உள்ள பழைமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலில் பவித்ரோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய் வரை நடைபெற உள்ளது.
இந்த 3 நாள்களும் உற்சவா் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு யாகசாலை பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் வேங்கடகிருஷ்ணன் மற்றும் உபயதாரா்கள், கிராமத்தினா் செய்து வருகின்றனா்.