பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
வடக்குப்பட்டு பெருமாள் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு உற்சவம்
ஸ்ரீபெரும்புதூா் அருகே வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசித்தல் மற்றும் சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனைகள் நடைபெற்றன.
பழைமையான இக்கோயிலில் ஆண்டு தோறும் தமிழ்ப்புத்தாண்டன்று வேத பண்டிதா்கள் பெருமாள் முன்பு அமா்ந்து கொண்டு பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். நிகழாண்டு புத்தாண்டையொட்டி பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் வேதபண்டிதா்கள் விசுவாவசு பஞ்சாங்கத்தை வாசித்தனா். கோயில் நுழைவு வாயில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி வாழைமரம் மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தனா்.