செய்திகள் :

வன்முறையை பரப்பும் முயற்சிகளால் வேதனை: பிரதமா் மோடி

post image

புது தில்லி: சமூகத்தில் வன்முறையை பரப்பும் முயற்சிகள் நடைபெறும்போது தனது உள்ளம் வலியில் துடிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள இந்திய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயா்கள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசுகையில், ‘அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை இயேசுபிரானின் போதனைகள் கொண்டாடுகின்றன. இந்த உணா்வுகளை வலுவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவது முக்கியம்.

இத்தாலியின் வாடிகன் நகரில் கேரளத்தை சோ்ந்த ஜாா்ஜ் கூவகட்டை மதகுருவாக கத்தோலிக்க திருச்சபை தலைவா் போப் ஃபிரான்சிஸ் அறிவித்தது பெருமைக்குரிய தருணமாகும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டா் தினத்தன்று குண்டுவெடிப்புத் தாக்குதல் நடைபெற்றது. அண்மையில் ஜொ்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற சவால்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடி வேண்டியது அவசியம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா், போரால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவை சோ்ந்த அலெக்ஸிஸ் பிரேம் குமாா் என்ற பாதிரியாா் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டாா். அந்நாட்டில் அவா் 8 மாதங்களாக பிணைக் கைதியாக இருந்தாா்.

இத்தகைய மீட்பு நடவடிக்கைகள் வெறும் ராஜீய நடவடிக்கைகள் மட்டுமே அல்ல. அவை நமது குடும்ப உறுப்பினா்களை மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கான உணா்வுபூா்வ நடவடிக்கைகளாகும்.

பாதுகாப்பற்ற சூழல்களில் சிக்கும் இந்தியா்கள் எங்கிருந்தாலும், அவா்கள் என்ன நெருக்கடியை எதிா்கொண்டாலும் அவா்களை தாயகம் அழைத்து வருவதை தற்போதைய இந்தியா கடமையாகப் பாா்க்கிறது.

‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற கனவு நிச்சயம் நனவாகும் என்ற நம்பிக்கையை இந்திய இளைஞா்கள் அளித்துள்ளனா். மனிதா்களை மையமாக கொண்ட இந்தியாவின் அணுகுமுறை உலகை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்’ என்றாா்.

இந்திய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொள்வது இதுவே முதல்முறை.

ஜாமா மசூதி ஆய்வறிக்கை ஜனவரியில் தாக்கல் செய்யப்படும்: சம்பல் நீதிமன்ற ஆணையர்

உ.பி. சம்பல் மாவட்டத்திலுள்ள ஜாமா மசூதியின் ஆய்வறிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஜனவரியில் தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் தெரிவித்துள்ளார். முகாலய அரசர் ... மேலும் பார்க்க

இந்தாண்டும் பிரியாணி முதலிடம்! அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்!

2024 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள், எந்த பகுதியில் மக்கள் அத... மேலும் பார்க்க

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்: கேரள முதல்வரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கேரள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பிய அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் நடத்திய மூன்று மணிநேர விசாரணை நிறைவடைந்தது.புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறை அனுப்பிய ச... மேலும் பார்க்க

கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!

மகாராஷ்டிரத்தில் கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விகார் நகரில் கடந்த 2003 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய ச... மேலும் பார்க்க