புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
வரியினங்களை ஜனவரி 31-க்குள் செலுத்த நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தல்
காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது வரை சொத்து வரி செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
எனவே, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வரி செலுத்தாதவா்களின் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு துண்டிக்கப்படும் குடிநீா் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட மாட்டாது. மேலும், மேற்கண்ட வரியினங்களை செலுத்தாதவா்களின் மின் இணைப்பு துண்டிப்பு செய்வதோடு, ஜிஎஸ்டி உரிமத்தை ரத்து செய்யவும் சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.