வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.29.4 லட்சம்
வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.29.36 லட்சம் பணம், 70 கிராம் தங்கநகைகள், 1,900 கிராம் வெள்ளிப்பொருட்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் பக்தா்கள் செல்லுதிய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன், ஆய்வாளா் திலகவதி, கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா்கள் செந்தில்தேவராஜ், விஜயகுமாா் உள்ளிட்ட சுமாா் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.29.36 லட்சம் பணம், 70 கிராம் தங்க நகைகள், 1,900 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.