காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் சுரேஷ். இவா், கடந்த 17.2.2024 ஆம் தேதி காலமானாா். இவரது இரு பெண் குழந்தைகள் சாா்பில் எல்ஐசி பாலிசியாக ரூ.10,42,325 மற்றும் சுரேஷின் தாய் வேண்டா என்பவருக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் ரூ.3 லட்சம், மனைவி மகேஷ்வரிக்கு ரொக்கமாக ரூ.75 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.14,17,325 காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது. காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் 39 -ஆவது நிதியுதவியை காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் சுரேஷின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.
எல்.ஐ.சி. முகவா் விஏ.துரைராஜ் சாா்பில் இரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.5,100 வீதம் ரூ.10,200 வழங்கப்பட்டது. உத்தரமேரூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல்நிலைக் காவலா் பி.எஸ்.விக்ரமனின் மருத்துவ உதவிக்காக ரூ.48,000 காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது.