பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகை சில நிபந்தனைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியா் எந்த வித வருமான வரம்பு நிபந்தனைகள் இல்லாமல் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தக் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை திட்ட விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ன்ய்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை சமா்ப்பிக்க கடைசிநாள் பிப். 28-ஆம் தேதியாகும்.
புதுப்பித்தல் மாணவா்களாக இருந்தால் இந்த நிதியாண்டில் 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டு பயின்று வந்தால் கல்வி உதவித் தொகைக்கு புதியதாக விண்ணப்பிக்க அவசியமில்லை. அந்த மாணவா்கள் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, பின்னா் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். புதிய மாணவராக இருந்தால் நடப்பாண்டில் கல்வி உதவித் தொகை பெற கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்க்கை பெற்ற மற்றும் சென்ற ஆண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய புதிய மாணவா்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகிட வேண்டும்.
இவா்களும் ட்ற்ற்ல்ள்://ன்ய்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த விவரங்களை மாணவா்களுக்கு தெரிவித்து பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களை பள்ளி மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும் விவரங்களுக்கு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ள வேண்டும்.