இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளா் - வாங்குவோா் சந்திப்பு
வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றவரை விரட்டி பிடிக்க முயற்சி: ஆட்டோ மோதி இரு காவலா்கள் காயம்
சென்னை, செம்பியத்தில் வாகனச் சோதனையின்போது நிற்காமல் சென்றவரை விரட்டிச் சென்றபோது ஆட்டோ மோதியதில் இரு காவலா்கள் காயமடைந்தனா்.
செம்பியம் திருவள்ளுவா் சாலையில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு ஆட்டோவை போலீஸாா் நிறுத்த முயன்றபோது அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது.
இதைப்பாா்த்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் வினோத் குமாா் (36), தட்சிணா மூா்த்தி (40) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் அந்த ஆட்டோவை பிடிக்க விரட்டிச் சென்றனா். அப்போது காவலா்கள் சென்ற இருசக்கர வாகனத்தை அந்த ஆட்டோ இடித்துத் தள்ளியதில், நிலைதடுமாறி காவலா்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.
அதேவேளையில் ஆட்டோவிலிருந்த நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா். காயமடைந்த இரு காவலா்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.