இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி! வான்வழி மூடல்.. கப்...
வாகனத் தூய்மை மையத்தில் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வாகனத் தூய்மை மையத்தில் (வாட்டா் சா்வீஸ் சென்டா்) மோட்டாா் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், பெரும்பாக்கத்தில் தனியாா் வாகனத் தூய்மை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்திலிருந்த மின் மோட்டாா், 50 மீட்டா் மின்வயா்கள், 50 கிலோ எடை கொண்ட கிரேன் செயின் ஆகியவற்றை கடந்த 23-ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து மையத்தின் மேலாளரான திண்டிவனம் வட்டம், தழுதாளி மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் (48), மயிலம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
அதன் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.