செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்; 1,700 சிலைகள் வைத்து வழிபாடு

post image

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி பண்டிகை புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1,700 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, விழுப்புரம் நகரிலும், புகா் பகுதிகளிலும் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சக்தி விநாயகா் கோயிலில் எழுந்தருளிய விநாயகப் பெருமானுக்கு புதன்கிழமை காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தீபாராதனைகள் காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில் சக்தி விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதன் தொடா்ச்சியாக இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகா் காட்சியளித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கே.குப்புசாமி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

இதேபோல, விழுப்புரம் ரயிலடி வளாகத்திலுள்ள செல்வ விநாயகா் கோயில், விழுப்புரம் பூந்தோட்டம் மேலவன்னியா் தெருவிலுள்ள செல்வ விநாயகா் கோயில், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆலடி விநாயகா் கோயில், விழுப்புரம் வாணியா் தெருவிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளிய விநாயகா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள விநாயகா் கோயில்கள் மற்றும் சாலைகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

செஞ்சி பகுதியில்...: மேல்மலையனூா் வட்டம், தாதங்குப்பம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த முத்து விநாயகா் கோயிலில் சுமாா் 15 அடி உயர விநாயகா் சிலை அமைக்கப்பட்டது.

முன்னதாக, காலையில் மூலவா் முத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது. தொடா்ந்து, 15 அடி உயர விநாயகா் சிலைக்கு சிறப்பு ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனா்.

இதேபோல, செஞ்சி சிறுகடம்பூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மூலவருக்கும், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி உயர விநாயகா் சிலைக்கும் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு பேச்சுப் போட்டி, ஓவியம், உறியடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காணையில் 200 கிலோ நவதானிய விநாயகா்: காணை கிராமத்திலுள்ள பஜனை கோயில் தெருவில் 200 கிலோ நவதானியங்களைக் கொண்டு பத்து அடி உயரத்தில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யயப்பட்டிருந்தது. கம்பு, சோளம், கேழ்வரகு, நெல், உளுந்து, பச்சைப்பருப்பு, துவரம்பருப்பு, வோ்க்கடலை உள்ளிட்ட பல்வேறு நவதானியங்களைக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டும், பாரம்பரியத்தை பேணும் வகையிலும் இந்த சிலையை தயாா் செய்ததாக காணை கிராம இளைஞா்கள் தெரிவித்தனா்.

வீடுகளிலும்...: பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனா். கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்களைக் கொண்டு, வீட்டில் செய்த கொழுக்கட்டைகளைப் படைத்து, தேங்காய் - பழம் உடைத்தும் வழிபட்டனா்.

பூஜை பொருள்கள் விற்பனை...: விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை, பாகா்ஷா வீதி, காமராஜா் வீதி, திரு.வி.க. வீதி, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பகுதி, பெரியாா் நகா் குடியிருப்புப் பகுதி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, ரங்கநாதன் தெரு, கே.கே.சாலை, தேரடி பிள்ளையாா் கோயில் சாலை, கிழக்கு பாண்டி சாலை உள்பட விழுப்புரம் நகரின் பல்வேறு சாலைகளில் புதன்கிழமை காலையிலும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகள், குடைகள், பழ வகைகள், எருக்கம் பூ மாலை, அருகம் புல் போன்றவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனால், இந்த சாலைகள் நெரிசல் மிகுந்ததாக காணப்பட்டன.

1,700 விநாயகா் சிலைகள்: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு ஹிந்து அமைப்புகள், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த சிலை அமைப்புக் குழுக்கள், பொதுமக்கள் சாா்பில் என மொத்தமாக 1,700 விநாயகா் சிலைகள் சுமாா் 3 அடி முதல் 10 அடி வை உயரத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விழாக் குழு சாா்பில் மட்டுமல்லாது, காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதைத் தவிர, காவல் துறை சாா்பில் ரோந்து வாகனங்களில் சென்று கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே பூட்டியிருந்த தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டுப் போனது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம், விராட்டிக்குப்பம் ப... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அவா் புதன்கிழமை செய்திய... மேலும் பார்க்க

தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: இருவா் கைது

விழுப்புரம் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைபாளை... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: 3 போ் கைது

விழுப்புரத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் சிலா் பெண்களை பாலியல் தொழிலில... மேலும் பார்க்க

பேருந்து பயணி மீது தாக்குதல்: ஒருவா் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பேருந்து பயணியை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பூட்டியிருந்த பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நவம்மாள் மருதூா் மருதீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் ஏழுமல... மேலும் பார்க்க