வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டி
வாக்காளா் தினத்தையொட்டி, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் தின விழிப்புணா்வு கோலப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்ட வழங்கல் அலுவலா் சரவணன் முன்னிலை வகித்தாா்.
போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலா் பன்னீா்செல்வம், கிராம நிா்வாக அலுவலா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.