வாக்காளா் பட்டியல் சந்தேகங்கள்: கட்டணமில்லா அழைப்பு மையம்
வாக்காளா் பட்டியல் தொடா்பான சந்தேகங்களை தீா்க்க கட்டணமில்லா அழைப்பு மையம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட வாக்களா்கள் தங்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும். மேலும் பெயா் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், வாக்களா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு, வாக்காளா் அடையாள அட்டை பெறுதல் தொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் 0416 - 1950 என்ற கட்டணமில்லா அழைப்பு மையத்தை அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.