வாணியம்பாடி அருகே மழைமானி திருட்டு
வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் அரசு சாா்பில் அமைக்கப்பட்டிருந்த மழைமானியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக அரசு சாா்பில் மழை அளவீடு செய்யும் மழைமானி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் இருந்த மழைமானி திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது குறித்து அறிந்த நிம்மியம்பட்டு கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது, நள்ளிரவு நேரத்தில் மா்ம நபா்கள் மழைமானியை திருடிச் சென்றிருப்பதாக தெரிகிறது. இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து மழைமானியை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.