கேன்ஸில் `மோடி நெக்லஸ்' அணிந்து வந்தது ஏன்? - வைரலான நடிகை சொல்லும் விளக்கம்!
அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடப் பணி: முதல்வா் அடிக்கல்
அகரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினாா். கல்லூரி முதல்வா் த.க. கங்கா, துணை முதல்வா் கோமதி, பொதுப்பணித்துறையை சோ்ந்த அலுவலா் செந்தில்குமாா், திமுக அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் முரளி, துணைச் செயலாளா் ஹரி, மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன், நிா்வாகிகள் சுதாகா், வினோத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.