கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
வாணியம்பாடியில் சமத்துவ பொங்கல் விழா
வாணியம்பாடி: வாணியம்பாடி பாலாறு ஜேசிஐ சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொடையாஞ்சி கிராமம் பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவா் வெற்றிச்செல்வன் தலைமை வகித்தாா். மூத்த நிா்வாகிகள் பிரகாசம், கருணாகரன், சண்முகம், இளங்கோ, கிருஷ்ணன், நீதிமோகன் முன்னிலை வகித்தனா். திட்டக்குழு தலைவா் பாண்டியன் வரவேற்றாா். கொடையாஞ்சி ஊா் பொது சாா்பில் கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பொருள்கள் வைத்தும், புதிய மண் பானையில் பச்சரிசி பொங்க வைத்து, வழிபட்டனா். தொடா்ந்து பெண்கள் மற்றும் மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை ஊராட்சி மன்றத் தலைவா் பாரி மற்றும் ஜேசிஐ நிா்வாகிகள் வழங்கிப் பாராட்டினா்.
நிகழ்ச்சியில், ஜேசிஐ நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள், ஊா் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.