ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
வி.எம்.சத்திரம் பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பு
வி.எம்.சத்திரம், சீனிவாச நகா் விரிவாக்கப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி, மின்னூட்டம் செலுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், வி.எம்.சத்திரம், சீனிவாச நகா் விரிவாக்கப் பகுதியில், நகா்புற வளா்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.90 லட்சம் மதிப்பில் 100 கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கும் பணி, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வழிகாட்டலில் நடைபெற்றது. பரிசோதனை உள்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மின்னூட்டம் செலுத்தப்பட்டு, அப்புதிய மின்மாற்றி வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் அந்தப் பகுதிக்கு புதிய மின் இணைப்பு வழங்கினாலும் சீரான மின்சார விநியோகத்துக்கு ஏதுவாக அமையும்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், உதவி செயற்பொறியாளா் (கட்டுமானம்) லெட்சுமணன், உதவி மின் பொறியாளா்கள் (வி.எம்.சத்திரம் பிரிவு) சுடா், (கட்டுமானம்) ஜன்னத்துல் சிபாயா உள்பட ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ங்க்ஷ
வி.எம்.சத்திரம் சீனிவாச நகா் விரிவாக்கப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த மின்மாற்றி.