செய்திகள் :

விகடன் இணையதள முடக்கம்: ``மிகத் தவறான முன்னுதாரணம்'' - மு.குணசேகரன் கண்டனம்

post image

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Vikatan Plus இதழில் வெளியான ஒரு கார்ட்டூன்தான் விகடன் தளத்தின் முடக்கத்துக்கு காரணமாக இருந்தால் அதை கண்டிக்கிறோம் என அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை எதிர்த்து சன் நியூஸ்தொலைக்காட்சியின் எடிட்டர் இன் சீஃப் குணசேகரன் அவர்களின் கண்டனப் பதிவு.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கிற ஒரு கேலிச் சித்திரத்துக்காக விகடன் இணைய தளத்தை முடக்கி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பாஜக அரசு அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்து, கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நசுக்கி இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, பொதுஅமைதி, அண்டை நாட்டுடனான நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துகளை வெளியிட்டால், இணையத்தை முடக்குவதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69 ஏ வழிவகை செய்கிறது.

விகடன் வெளியிட்ட கார்ட்டூன், பொது அமைதியை குலைக்கவோ, இறையாண்மை – பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கவோ இல்லை. அமெரிக்காவுடனான நட்புறவு இதனால் கெடவும் இல்லை. சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில், ஆவணங்களின்றி வசித்து வந்த குடிமக்களை கை, கால்களில் விலங்கு மாட்டி ராணுவ விமானத்தில் அனுப்பும் செயலை, அமெரிக்க ஊடகங்களும் அந்நாட்டு குடிமக்களும் டிரம்பின் ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

விகடனின் கார்ட்டூனால் நல்லுறவு கெடுவதற்கு வாய்ப்பே இல்லை. சக இந்திய குடிமக்களை ஈவு இரக்கமின்றி, கை கால்களில் விலங்கிட்டு 40 மணி நேரம் நரகக் குழியில் தள்ளியதை கண்டதால் ஒரு பத்திரிகையாளனுக்கு ஏற்பட்ட அறச்சீற்றம்தான் அந்த கார்ட்டூன். அந்தச் சீற்றம் தேசபக்தி கொண்ட லட்சோப லட்சம் இந்தியர்களின் உணர்வையே அந்த கார்ட்டூன் வெளிப்படுத்தியது.அமெரிக்காவின் தடாலடி நடவடிக்கையை எதிர்த்துக் கேள்வி கேட்க இயலாத நிலையில், அரசியல் ரீதியாக பாஜக அரசின் தோல்வியை மறைக்கவே, ஒரு கேலிச்சித்திரத்துக்காக விகடன் இணையதளத்தை முடக்கி இருக்கிறார்கள்.

vikatanlogo

எந்த விளக்கமும் கோராமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை இயற்கை நீதிக்கு எதிரானது.பிரதமர் மோடியை விமர்சிக்கும் கேலிச் சித்திரம், இந்திய நாட்டையோ இறையாண்மையையோ கேலிக்கு உள்ளாக்கும் சித்திரம் அல்ல. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகத் தவறான முன்னுதாரணம். நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கை நிச்சயம் கேலிக்கு உள்ளாகும். கருத்துச் சுதந்திரம் நிலைநாட்டப்படும்.

- மு.குணசேகரன்

எடிட்டர் இன் சீப்

சன் நியூஸ்

விருதுநகர்: அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் திடீர் ஆய்வு; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும... மேலும் பார்க்க

Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி!

டெல்லி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்காக கூடிய கூட்டத்தால் 18 பேர் மரணித்ததை அடுத்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், அதிக முன்பதிவில்லாத டிக்கெட் விற்பனை செய்யப்படுவது, ஒரே பெட்டியில் அதிக நபர்கள் ஏ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள்; இனியாவது ஸ்டாலின்...' - இபிஎஸ் காட்டம்!

கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் 'தி.மு.க' தலைமையிலான தமிழ்நாடு அரசைக் ... மேலும் பார்க்க

NTK: "தமிழ்த்தேசியத்திற்கு எதிரான பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள்" - சீமான் மீது தமிழரசன் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாகத் தமிழரசன் வெளியிட்டுள்ள கடிதத்தில், "32 ஆண்டு காலமாகத் தமிழ்த் தேசிய அரசியலுக்கான ப... மேலும் பார்க்க

Stalin: `வடசென்னையை வளர்ந்த சென்னையாக்குவோம்; 90% வாக்குறுதிகள்..!“ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று (பிப்19) சென்னை புளியந்தோப்பில் 712 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், வட சென்னையின் வளர்... மேலும் பார்க்க

Vijay: ``விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி...'' -பாஜக அண்ணாமலை கேள்வி

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க