செய்திகள் :

விஜய் உரையில் அரசியல் உள்நோக்கம்: பெ.சண்முகம்

post image

கரூா் துயர சம்பவம் குறித்த தவெக தலைவா் விஜய்யின் காணொலி உரைஅரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தவெக தலைவா் விஜய் கடந்த சனிக்கிழமை நடத்திய பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். பலா் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் அன்றிரவே கரூா் சென்று உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று தினங்களுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த காணொலி உரை உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிா்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. உயிரிழப்பு தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தன்னையும், தன் கட்சி தொண்டா்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறாா் விஜய். இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.

பாஜக மலிவான அரசியல்-மு. வீரபாண்டியன்: இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் விடுத்த அறிக்கை: கரூா் துயர சம்பவம் குறித்து சில சமூக ஊடகங்களில் அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு அமைத்திருப்பதும், அந்தக் குழு உறுப்பினா் ஒருவா் வெளியிட்ட கருத்தும் ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பேரிடா் துயரங்களில் ஏற்படும் உயிரிழப்பை மையமாக வைத்து ஆதாயம் தேடும் வகையில் பாஜக மலிவான அரசியலை செய்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னை, புறநகரில் 3 நாள்களுக்கு மழை!

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மை... மேலும் பார்க்க

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய வானிலை ஆய்வு துறை வ... மேலும் பார்க்க

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் வேலுசாமிபுரத்த... மேலும் பார்க்க