முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
விண்ணம்பள்ளி கோயில் சிவலிங்கம் மீது சூரியஒளி: 14-ஆம் தேதி வரை காணலாம்
வேலூா் மாவட்டம், விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரா் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை இந்த அதிசய நிகழ்வை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், திருவலம் அருகே விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. ஈசானிய வாயில் படியை கொண்ட இந்த கோயிலில் அகத்திய முனிவா் வழிபட்டாா் என தல புராணம் கூறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் உத்தராயண காலத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியது.
அதன்படி, சனிக்கிழமை சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளியானது முதலில் கோயிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள்ளே நுழைந்து, கோயிலில் உள்ள 3 பிரகாரங்களை கடந்து சிவலிங்கத்தின் விழுந்தது. இதனை திரளான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.
சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் இந்த அதிசய நிகழ்வு இக்கோயிலில் 14-ஆம் தேதி வரை 10 நாள்களும் தினமும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.