நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!
வினா - விடை வங்கி... இந்தியாவில் பன்முகத்தன்மை!
1. இந்தியாவில் அதிக மழைப் பொழிவை பெறும் பகுதி எது?
(a) ஊட்டி
(b) திருவனந்தபுரம்
(c) மௌசின்ரம்
(d) கன்னியாகுமரி
2. இந்தியாவில் குறைவான மழைப் பொழிவை பெறும் பகுதி எது?
(a) ஹம்பி
(b) ஜெய்சால்மர்
(c) கோட்டா
(d) மணாலி
3. இந்தியாவில் பேசப்படும் முதல் ஐந்து மொழிகளை வரிசைப்படுத்துக (2011-ன் கணக்கெடுப்பின்படி)
(a) தமிழ், இந்தி, மராத்தி, வங்காளம், தெலுங்கு
(b) மராத்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, இந்தி
(c) இந்தி, வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ்
(d) வங்காளம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி
4. இந்திய அரசியலமைபபுச் சட்டத்தின் எட்டாவது அட்டவணைப்படி அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகளின் எண்ணிக்கை?
(a) 20 மொழிகள்
(b) 24 மொழிகள்
(c) 21 மொழிகள்
(d) 22 மொழிகள்
5. இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
(a) 2002
(b) 2005
(c) 2004
(d) 2003
6. இந்தியாவில் எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன?
(a) 8 மொழிகள்
(b) 7 மொழிகள்
(c) 11 மொழிகள்
(d) 10 மொழிகள்
7. இந்தியாவில் அறிவிக்கப்பட்ட செம்மொழிகளை ஆண்டுகள் வாரியாக வரிசைப்படுத்துக.
(a) மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரியா, தமிழ், சமஸ்கிருதம்
(b) தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா
(c) தமிழ், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், ஒரியா, மலையாளம்
(d) தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா
8. இந்திய அரசால் 2024 ஆம் ஆண்டு எத்தனை மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன?
(a) 6 மொழிகள்
(b) 7 மொழிகள்
(c) 5 மொழிகள்
(d) 4 மொழிகள்
9. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை?
(a) 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள்
(b) 29 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள்
(c) 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள்
(d) 27 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள்
10. மோகினியாட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் செவ்வியல் நடனம்?
(a) தமிழ்நாடு
(b) கேரளம்
(c) மகாராஷ்டிரம்
(d) தெலங்கானா
11. பிஹு நடனம் எந்த மாநிலத்தின் செவ்வியல் நடனம்?
(a) அசாம்
(b) அருணாசல பிரதேசம்
(c) ஹரியாணா
(d) பஞ்சாப்
12. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்டொர் இடம்பெற்றுள்ள நூல்?
(a) சத்திய சோதனை
(b) ஹிந்து ஸ்வராஜ்
(c) இந்திய போராட்டம்
(d) டிஸ்கவரி ஆஃப் இந்தியா
13. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் எனக் கூறியவர்?
(a) வி.ஏ.ஸ்மித்
(b) சர் ஜான் மார்ஷல்
(c) காரல் மார்க்ஸ்
(d) எம்.என்.ராய்
14. கீழ்க்கண்டவற்றில் ஆந்திர பிரதேசத்தின் செவ்வியல் நடனம்?
(a) கதகளி
(b) பரதநாட்டியம்
(c) குச்சிப்புடி
(d) ஒடிசி
15. இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் மொழி எது? (2011-ன் கணக்கெடுப்பின்படி)
(a) தமிழ்
(b) வங்காளம்
(c) தெலுங்கு
(d) இந்தி
16. இந்தியா பின்வருவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(a) தீவு
(b) கண்டம்
(c) துணைக் கண்டம்
(d) இவற்றில் எதுவுமில்லை
17. டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலினை எழுதியவர்?
(a) ஜவஹர்லால் நேரு
(b) இராஜாஜி
(c) வ.உ.சிதம்பரனார்
(d) நேதாஜி
18. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர்?
(a) மகாத்மா காந்தி
(b) அம்பேத்கர்
(c) ஜவஹர்லால் நேரு
(d) வல்லபபாய் படேல்
19. பின்வருவனவற்றுள் எத்தனை இணைகள் சரியானவை?
பொம்மலாட்டம் - தமிழ்நாடு
தெய்யம் - பஞ்சாப்
பாங்க்ரா - கேரளம்
கார்பா - குஜராத்
(a) ஒன்று
(b) இரண்டு
(c) மூன்று
(d) நான்கு
20. இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டிபிடித்த 60 சதவிகித கல்வெட்டுகள் பின்வரும் எந்த மாநிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது?
(a) உத்தர பிரதேசம்
(b) மகாராஷ்டிரம்
(c) தமிழ்நாடு
(d) ஆந்திரம்
விடைகள்
1. (c) மௌசின்ரம்
2. (b) ஜெய்சால்மர்
3. (c) இந்தி, வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ்
4. (d) 22 மொழிகள்
5. (c) 2004
6. (c) 11 மொழிகள்
7. (b) தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா
8. (c) 5 மொழிகள்
9. (a) 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள்
10. (b) கேரளம்
11. (a) அசாம்
12. (d) டிஸ்கவரி ஆஃப் இந்தியா
13. (a) வி.ஏ.ஸ்மித்
14. (c) குச்சிப்புடி
15. (d) இந்தி
16. (c) துணைக் கண்டம்
17. (a) ஜவஹர்லால் நேரு
18. (c) ஜவஹர்லால் நேரு
19. (b) இரண்டு
20. (c) தமிழ்நாடு