செய்திகள் :

வினா-விடை வங்கி... இந்திய அரசியலமைப்பு!

post image

1. இந்தியாவுக்கென அரசியல் நிர்ணய சபை வேண்டுமென முதல் முறையாக கூறியவர் யார்?

(a) ஜவஹர்லால் நேரு

(b) மகாத்மா காந்தி

(c) எம்.என்.ராய்

(d) பி.ஆர்.அம்பேத்கர்

2. அரசியல் நிர்ணய சபை வேண்டுமென முதல் முறையாக காங்கிரஸ் கோரிக்கை வைத்த ஆண்டு?

(a) 1934

(b) 1937

(c) 1935

(d) 1936

3. அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்ற ஆண்டு?

(a) 1940

(b) 1942

(c) 1944

(d) 1946

4. அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை?

(a) 210

(b) 215

(c) 208

(d) 216

5. கீழ்க்கண்ட தலைவர்களில் அரசியல் நிர்ணய சபையில் இடம்பெறாதவர் யார்?

(a) ஜவஹர்லால் நேரு

(b) பி.ஆர். அம்பேத்கர்

(c) மகாத்மா காந்தி

(d) வல்லபபாய் படேல்

6.அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

(a) டிசம்பர் 7, 1946

(b) டிசம்பர் 9, 1946

(c) டிசம்பர் 10, 1945

(d) டிசம்பர் 9, 1945

7. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை?

(a) 211

(b) 225

(c) 230

(d) 210

8. அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்ற மிக மூத்த தலைவர் யார்?

(a) மகாத்மா காந்தி

(b) வல்லபபாய் படேல்

(c) இராஜேந்திர பிரசாத்

(d) சச்சிதானந்த சின்ஹா

9. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவர் யார்?

(a) ஜவஹர்லால் நேரு

(b) பி.ஆர்.அம்பேத்கர்

(c) வி.டி.கிருஷ்ணமாச்சாரி

(d) சச்சிதானந்த சின்ஹா

10. அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?

(a) இராஜேந்திர பிரசாத் மற்றும் ஜவஹர்லால் நேரு

(b) ஹெச்.சி. முகர்ஜி மற்றும் வி.டி.கிருஷ்ணமாச்சாரி

(c) வல்லபபாய் படேல் மற்றும் எம்.என்.ராய்

(d) சச்சிதானந்த சின்ஹா மற்றும் ஹெச்.சி.முகர்ஜி

11.குறிக்கோள் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நாள்?

(a) டிசம்பர் 13, 1946

(b) டிசம்பர் 14, 1946

(c) டிசம்பர் 15, 1946

டிசம்பர் 16, 1946

12. குறிக்கோள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?

(a) ஜனவரி 11, 1947

(b) ஜனவரி 15, 1947

(c) ஜனவரி 22, 1947

(d) ஜனவரி 26, 1947

13. அரசியல் நிர்ணய சபையால் தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?

(a) ஜூலை 22, 1947

(b) ஜனவரி 24, 1947

(c) ஜனவரி 26, 1947

(d) ஜனவரி 30, 1947

14. அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?

(a) ஜனவரி 22, 1947

(b) ஜனவரி 22, 1950

(c) ஜனவரி 24, 1947

(d) ஜனவரி 24, 1950

15. அரசியலமைப்பை உருவாக்க அரசியல் நிர்ணய சபை எடுத்துக் கொண்ட காலம்?

(a) 3 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாள்கள்

(b) 2 ஆண்டுகள் 10 மாதங்கள் 18 நாள்கள்

(c) 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாள்கள்

(d) 3 ஆண்டுகள் 10 மாதங்கள் 18 நாள்கள்

16. அரசியலமைப்பை உருவாக்க ஆன செலவு?

(a) ரூ.60 லட்சம்

(b) ரூ.65 லட்சம்

(c) ரூ.64 லட்சம்

(d) ரூ.68 லட்சம்

17. அரசியல் நிர்ணய சபையின் கடைசி அமர்வு நடைபெற்ற நாள்?

(a) ஜனவரி 22, 1950

(b) ஜனவரி 24, 1950

(c) ஜனவரி 26, 1950

(d) ஜனவரி 30, 1950

18. வரைவுக்குழு அமைக்கப்பட்ட நாள்?

(a) ஜூலை 19, 1947

(b) ஆகஸ்ட் 29, 1947

(c) ஆகஸ்ட் 30, 1950

(d) ஜனவரி 30, 1950

19. வரைவுக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?

(a) 7 பேர்

(b) 10 பேர்

(c) 15 பேர்

(d) 8 பேர்

20. உடல்நலக் குறைவு காரணமாக வரைவுக்குழுவிலிருந்து ராஜிநாமா செய்தவர்?

(a) டாக்டர்.கே.எம்.முன்ஷி

(b) சையது முகமது சாதுல்லா

(c) என்.மாதவ் ராவ்

(d) பி.எல்.மிட்டர்

21. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?

(a) நவம்பர் 16, 1949

(b) நவம்பர் 26, 1949

(c) ஜனவரி 24, 1949

(d) ஜனவரி 26, 1949

22. அரசியலைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதில் இடம்பெற்றிருந்தவை?

(a) முகவுரை, 390 சட்டப்பிரிவுகள், 8 அட்டவணைகள்

(b) முகவுரை, 395 சட்டப்பிரிவுகள், 10 அட்டவணைகள்

(c) முகவுரை, 395 சட்டப்பிரிவுகள், 8 அட்டவணைகள்

(d) முகவுரை, 396 சட்டப்பிரிவுகள், 10 அட்டவணைகள்

23. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர்?

(a) மகாத்மா காந்தி

(b) டாக்டர் அம்பேத்கர்

(c) எம்.என்.ராய்

(d) டாக்டர் இராஜேந்திர பிரசாத்

24. அரசியல் நிர்ணய சபையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்?

(a) எம்.என்.ராய்

(b) பி.என்.ராவ்

(c) டாக்டர் அம்பேத்கர்

(d) வல்லபபாய் படேல்

25. இந்திய அரசியலமைப்பைத் தனது கைப்பட எழுதியவர்?

(a) பிரேம் பிஹாரி நாராயண் ரைஸாதா

(b) சர்தார் வல்லபாய் படேல்

(c) டாக்டர் அம்பேத்கர்

(d) ஜவஹர்லால் நேரு

விடைகள்

1. (c) எம்.என்.ராய்

2. (c) 1935

3. (d) 1946

4. (c) 208

5. (c) மகாத்மா காந்தி

6. (b) டிசம்பர் 9, 1946

7. (a) 211

8. (d) சச்சிதானந்த சின்ஹா

9. (d) சச்சிதானந்த சின்ஹா

10. (b) ஹெச்.சி. முகர்ஜி மற்றும் வி.டி.கிருஷ்ணமாச்சாரி

11. (a) டிசம்பர் 13, 1946

12. (c) ஜனவரி 22, 1947

13. (a) ஜூலை 22, 1947

14. (d) ஜனவரி 24, 1950

15. (c) 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாள்கள்

16. (c) ரூ.64 லட்சம்

17. (b) ஜனவரி 24, 1950

18. (b) ஆகஸ்ட் 29, 1947

19. (a) 7 பேர்

20. (d) பி.எல்.மிட்டர்

21. (b) நவம்பர் 26, 1949

22. (c) முகவுரை, 395 சட்டப்பிரிவுகள், 8 அட்டவணைகள்

23. (b) டாக்டர் அம்பேத்கர்

24. (b) பி.என்.ராவ்

25. (a) பிரேம் பிஹாரி நாராயண் ரைஸாதா