செய்திகள் :

வினா-விடை வங்கி... விஜயநகரப் பேரரசு!

post image

1.பின்வருபவர்களில் ’ஆந்திராவின் போஜன்’ என்று அழைக்கபடுபவர் யார்?

(a) ஹரிஹரர்

(b) இராஜேந்திர சோழர்

(c)கிருஷ்ண தேவராயர்

(d)புக்கர்

2. கிருஷ்ண தேவராயரின் கடைசிப் போர் எது?

(a) தலைக்கோட்டைப் போர்

(b) ராய்ச்சூர் போர்

(c) ஹல்தி காட்டி போர்

(d) முதல் கர்நாடகப் போர்

3.கிருஷ்ண தேவராயர் யாரிடமிருந்து ராய்ச்சூர் கோட்டையை பெற்றார்?

(a) ராமபத்ரா

(b) இஸ்மாயில் ஆதில் ஷா

(c) வட்சராஜா

(d) மிஹிர போஜா

4. கிருஷ்ண தேவராயர் எந்த மரபைச் சேர்ந்தவர்?

(a) சங்கம மரபு

(b) சாளுவ மரபு

(c) துளுவ மரபு

(d) ஆரவீடு மரபு

5. சங்கம வம்சம் மற்றும் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?

(a) முதலாம் ஹரிஹரர்

(b) கிருஷ்ண தேவராயர்

(c) புக்கர்

(d) வித்யாரண்யர்

6. முதலாம் ஹரிஹரரின் இயற்பெயர் என்ன?

(a) மசப்பா

(b) கம்பா

(c) ஹக்கா

(d) முத்தப்பா

7. ஹரிஹரரின் ஆட்சிக் காலம் என்ன?

(a) கி.பி.1336-1356

(b) கி.பி. 1485 -1505

(c) கி.பி. 1505 -1570

(d) கி.பி. 1570 -1672

8. புக்கரின் ஆட்சிக்காலம் என்ன?

(a) கி.பி. 1505 -1570

(b) கி.பி 1356-1377

(c) கி.பி. 1570 -1672

(d) கி.பி. 1485 -1505

9. புக்கரின் இயற்பெயர் என்ன?

(a) கம்பா

(b) மசப்பா

(c) முத்தப்பா

(d) முதலாம் புக்கர் ராயன்

10. விஜயநகர நிர்வாகத்தின் அமரநாயக்கர் முறையில் நாயக்கர்களின் பங்கு என்ன?

(a) கோட்டைத் தளபதி

(b) வரி வசூலிப்பவர்

(c) உளவாளிகளின் தலைவர்

(d) கிராமத் தலைவர்

11. விஜய நகரப் பேரரசில் கோட்டைத் தளபதிகளில் நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

(a) அமரம்

(b) கொத்தாளம்

(c) தளவாய்

(d) கொத்தவால்

12. விஜய நகரப் பேரரசில் வரி வசூலிக்கும் பொறுப்பு யாருடையது?

(a) கோட்டைத் தளபதி

(b) வரி வசூலிப்பவர்

(c) உளவாளிகளின் தலைவர்

(d) கிராமத் தலைவர்

13. விஜயநகரப் பேரரசின் மரபுகளை வரிசைப்படுத்துக?

(i) துளுவ மரபு, (ii) சங்கம மரபு, (iii) சாளுவ மரபு, (iv) ஆரவீடு மரபு

(a) (i) (ii) (iii) (iv)

(b) (iv) (iii) (ii) (i)

(c) (ii) (iii) (i) (iv)

(d) (iii) (ii) (iv) (i)

14. விஜயநகரப் பேரரசில் எத்தனை மரபுகள் உள்ளன?

(a) 4 மரபுகள்

(b) 6 மரபுகள்

(c) 12 மரபுகள்

(d) 21 மரபுகள்

15. முதலாம் தேவராயர் காலத்தில் அரசவைக்கு வந்த ரஷிய நாட்டுப் பயணி யார்?

(a) இபின் பதூதா

(b) பயஸ்

(c) நிகிடின்

(d) போர்பஸா

16. மதுர விஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

(a) கங்காதேவி

(b) சூர்தாஸ்

(c) கபீர்

(d) மீராபாய்

17. அமுக்தமால்யதா என்ற நூலின் ஆசிரியர் யார்?

(a) காளிதாசன்

(b) பாசனம்

(c) கிருஷ்ணதேவராயர்

(d) துளசிதாஸ்

18. புகழ்பெற்ற விஜய விட்டலா கோவில் எங்கு அமைந்துள்ளது?

(a) ஹம்பி

(b) பத்ராகாலம்

(c) ஸ்ரீரங்கம்

(d) பெலூர்

19. கிருஷ்ண தேவராயரின் அரசவையில் எத்தனை அறிஞர்கள் இருந்தனர்?

(a) 8

(b) 10

(c) 12

(d) 16

20. கிருஷ்ண தேவராயரின் அரசவையில் இருந்த கவிஞர்கள் எந்தப் பெயரால் அழைக்கப்பட்டனர்?

(a) அஷ்டதிக் கஜங்கள்

(b) நவரத்தினங்கள்

(c) அஷ்ட பிரதான் 

(d) பிஜகனிதம்

21. ஆந்திரகவிதா பிதாமகன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ண தேவராயரின் கவிஞர் யார்?

(a) மாதையாகாரி மல்லண்ணா

(b) நந்தி திம்மண்ணா

(c) அல்லசானி பெத்தண்ணா

(d) அய்யாலராஜு ராமபத்ருடு 

22. முதலாம் தேவராயர் ஆதரித்த தெலுங்கு கவிஞர் யார்?

(a) ஸ்ரீநாதா

(b) தெனாலி ராமன்

(c) புஷ்பதந்தா

(d) சர்வபௌமா

23. மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்ற படைப்புகளை எழுதியவர் யார்?

(a) அல்லசானி பெத்தண்ணா

(b) அய்யாலராஜு ராமபத்ருடு 

(c)  ராமராஜ பூஷன்

(d) துர்ஜாதி

24. கிருஷ்ண தேவராயர் தனது தாயின் பெயரில் உருவாக்கிய நகரத்தின் பெயர் என்ன?

(a) வித்யாபுரம்

(b) லட்சுமிபுரம்

(c) நாகலாபுரம்

(d) கங்காபுரம்

25. விஜயநகரத்தில் ஆட்சி செய்ய நிலங்கள் வழங்கப்பட்ட ராணுவத் தளபதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

(a) ராயர்கள்

(b) அமீர்கள்

(c) அமர நாயகர்கள்

(d) மேற்கூறிய எதுவும் இல்லை

விடைகள்

1. (c) கிருஷ்ண தேவராயர்

2. (a) தலைக்கோட்டைப் போர்

3. (b) இஸ்மாயில் ஆதில் ஷா

4. (c) துளுவ மரபு

5. (a) முதலாம் ஹரிஹரர்

6. (c) ஹக்கா

7. (a) கி.பி.1336-1356

8. (b) கி.பி 1356-1377

9. (d) முதலாம் புக்கர் ராயன்

10. (a) கோட்டைத் தளபதி

11. (a) அமரம்

12. (a) கோட்டைத் தளபதி

13. (c) (ii) (iii) (i) (iv)

14. (a) 4 மரபுகள்

15. (c) நிகிடின்

16. (a) கங்காதேவி

17. (c) கிருஷ்ணதேவராயர்

18. (a) ஹம்பி

19. (a) 8

20. (a) அஷ்டதிக் கஜங்கள்

21. (c) அல்லசானி பெத்தண்ணா

22. (a) ஸ்ரீநாதா

23. (a) அல்லசானி பெத்தண்ணா

24. (c) நாகலாபுரம்

25. (c) அமர நாயக்கர்கள்

வினா-விடை வங்கி... யாப்பிலக்கணம்

கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கனமே யாப்பிலக்கணம் ஆகும். இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.1. அடி.........வகைப்படும்(a) 5(b) 3(c) 2(d) 62. அசை.........வகைப்ப... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... இந்தியாவில் பன்முகத்தன்மை!

1. இந்தியாவில் அதிக மழைப் பொழிவை பெறும் பகுதி எது?(a) ஊட்டி(b) திருவனந்தபுரம்(c) மௌசின்ரம்(d) கன்னியாகுமரி2. இந்தியாவில் குறைவான மழைப் பொழிவை பெறும் பகுதி எது?(a) ஹம்பி(b) ஜெய்சால்மர்(c) கோட்டா(d) மணா... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... இந்திய அரசியலமைப்பு!

1. இந்தியாவுக்கென அரசியல் நிர்ணய சபை வேண்டுமென முதல் முறையாக கூறியவர் யார்?(a) ஜவஹர்லால் நேரு(b) மகாத்மா காந்தி(c) எம்.என்.ராய்(d) பி.ஆர்.அம்பேத்கர்2. அரசியல் நிர்ணய சபை வேண்டுமென முதல் முறையாக காங்கி... மேலும் பார்க்க