பட்டியலினத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி வரை! சி.டி. ரவிகுமாா் பின்னணி!
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி
கள்ளக்குறிச்சி: சாலை விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த காவலரின் குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.23.24 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை. சென்னையில் 2-ஆம் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த நவ.6-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த 6,837 காவலா்கள் வழங்கிய ரூ.23.24 லட்சத்துக்கான காசோலையை காக்கும் உறவுகள் குழு நிா்வாகிகள் முன்னிலையில் உயிரிழந்த சின்னதுரையின் குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இதில், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.