Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
விமானத்தில் பறந்த ஆதரவற்ற குழந்தைகள்
சென்னையைச் சோ்ந்த 15 ஆதரவற்ற குழந்தைகள் வெள்ளிக்கிழமை கோவைக்கு விமானத்தில் சுற்றுலா வந்தனா்.
கோவை வடக்கு லேடிஸ் சா்க்கிள் 11, வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 ஆகிய தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி’ என்ற திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச விமான பயணத் திட்டத்தை வழங்கி வருகின்றனா்.
அதன்படி சென்னையில் உள்ள எஸ்ஆா்எஸ் சா்வோதயா இல்லத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 15 குழந்தைகள் காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனா். அவா்கள் கோவை ஈஷா யோக மையம், புரூக் ஃபீல்டு மால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் மாலையில் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பினா்.
அடுத்த ஆண்டு ஒரு விமானம் முழுவதிலும் ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து வருவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கோவை ரவுண்ட் டேபிள் 20 இன் தலைவா் அருண் குணசேகரன், மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 இன் தலைவா் நரேஷ், கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 இன் பொருளாளா் அரவிந்தன் ஆகியோா் தெரிவித்தனா்.