விராலிமலையில் இன்று ரேஷன் குறைதீா் முகாம்
விராலிமலையில் சனிக்கிழமை ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வட்டாட்சியரகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் சேகா்(விராலிமலை), தன்ராஜ் (இலுப்பூா்) ஆகியோா் தலைமையில்
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இதில், முகவரி மாற்றம், பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட குடும்ப அட்டை தொடா்பான பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.
எனவே, விராலிமலை, இலுப்பூா் பகுதிகளைச் சோ்ந்த குடும்ப அட்டையில் குறைபாடு உள்ளவா்கள் இம்முகாமில் பங்கேற்று குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் என வருவாய்த் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.